Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ரொஷானிடமிருந்து புதிய கட்சி: பொலன்னறுவையிலிருந்து மட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள்!

T

The Leader Desk

டிசம்பர் 29, 2023 • 1:14 PM

ரொஷானிடமிருந்து புதிய கட்சி: பொலன்னறுவையிலிருந்து மட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைக்கப்படவுள்ள கூட்டணியின் பிரதித் தலைமைப் பதவி கிடைக்குமென்று எண்ணியிருந்தாலும், அதுவும் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது.
  • எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதியன்று, நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
  • விளக்கமாகச் சொல்வதாயின், கொண்டம் போல் வேலையை வாங்கிவிட்டு, கொமடுக்குள் போட்டுவிட்ட நிலைமைதான் ரொஷானுக்கு ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அமைக்கப்படவுள்ள கூட்டணியின் பிரதித் தலைமைப் பதவி கிடைக்குமென்று எண்ணியிருந்தாலும், அதுவும் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது.

விளக்கமாகச் சொல்வதாயின், கொண்டம் போல் வேலையை வாங்கிவிட்டு, கொமடுக்குள் போட்டுவிட்ட நிலைமைதான் ரொஷானுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரொஷானும் ஆட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அவர் புதிதாகக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளாரென்று தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்புடன் அக்கட்சி தனது பிரச்சாரத்தை ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதியன்று, நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொலன்னறுவையின் மாவீரன் ரொஷான் அப்படி விளையாடத் தயாராக இருக்கின்றபோது, ​​பொலன்னறுவை மண்ணிலிருந்து உதித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதாக, புத்தளத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படுமென்றும் அதன்போது தனது பெயர் முன்மொழியப்பட்டால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுதான் எஞ்சியிருந்தது, இப்போதும் அந்தக் குறையும் பூர்த்தியாகிவிட்டது. போற போக்கில், இம்முறை பொலன்னறுவையிலிருந்து மாத்திரம் இரு வேட்பாளர்கள் களமிறங்கப் போகிறார்கள்போலத் தெரிகிறது. இன்னும் போகப் போக யார்யார் வருவார்களோ தெரியவில்லை!

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரொஷானிடமிருந்து புதிய கட்சி: பொலன்னறுவையிலிருந்து மட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள்! | Tamil Leader | We Lead the Nation