Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இம்முறை திசைகாட்டிக்கு அதிக வாய்ப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 29, 2023 • 1:12 PM

இம்முறை திசைகாட்டிக்கு அதிக வாய்ப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையர்களும் இந்நாளில் பக்தியுடன் 'க்றிஸ்மஸ்' கொண்டாடினர்.
  • 'அமைதியின் இளவரசர்' என்று உலக மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் யேசு கிறிஸ்துவின் தனித்துவமான பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25ஆம் திகதி க்றிஸ்மஸ் தினமாகும்.
  • நத்தாரின் சிவப்பு வர்ணமும், ஜேவிபிக்கு வேலைபார்க்கும் நேரம் கனிந்திருக்கிறது.
  • அதன்படி, திசைக்காட்டியின் தேர்தல் ஆயத்தங்களின் ஆரம்ப கட்ட வேலைத்திட்ட பொறிமுறையானது 2023 டிசம்பரில் நிறைவடையவுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கையர்களும் இந்நாளில் பக்தியுடன் 'க்றிஸ்மஸ்' கொண்டாடினர்.

'அமைதியின் இளவரசர்' என்று உலக மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் யேசு கிறிஸ்துவின் தனித்துவமான பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25ஆம் திகதி க்றிஸ்மஸ் தினமாகும். மார்கழிக் குளிரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்த யேசு க்றிஸ்து, உலக அமைதியை நிலைநாட்ட தனது இன்னுயிரை தியாகம் செய்த மரியாதைக்குரிய மத போதகராவார்.

இலங்கையின் பிரதான கிறிஸ்மஸ் ஆராதனையானது கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவரது உரையில் வழக்கமான அரசியல் இருந்தது. அடுத்த ஆண்டு தேசிய தேர்தல் ஆண்டென்பதால், க்றிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போதும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் முக்கிய தலைப்பு.

செய்திகளின்படி, கட்சிகள் பலவற்றின் முக்கிய தலைப்பு ஜேவிபி தலைமையிலான திசைகாட்டி ஆகும். ஜேவிபி வெற்றிபெற்றார் நாட்டை விட்டுச்செல்ல நேரிடுமென்று சிலர் மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால், ஒரு மாறுதலுக்காக திசைக்காட்டிக்கும் வாய்ப்பளித்துப் பார்ப்போம் என்று சிலர் கூறுகின்றனர்.

நத்தாரின் சிவப்பு வர்ணமும், ஜேவிபிக்கு வேலைபார்க்கும் நேரம் கனிந்திருக்கிறது. நத்தார் விடுமுறையென்றுகூட பார்க்காம், திசைக்காட்டியினர் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்றனர். கடந்த வாரத்தில், தொகுதிவாரிக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று, மாவட்ட மட்டத்தில் தமது தொழிற்சங்கங்களை பலப்படுத்தவும் புதிய கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திசைக்காட்டியின் தேர்தல் ஆயத்தங்களின் ஆரம்ப கட்ட வேலைத்திட்ட பொறிமுறையானது 2023 டிசம்பரில் நிறைவடையவுள்ளது. அநுர இம்முறை வெற்றி பெறுவது உறுதி என திசைக்காட்டியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில், வேட்பாளராகப் போட்டியிட மாட்டார் என்றும் அவர்கள் ஏற்கனவே கணக்கிட்டுள்ளனர். ஐமசவும் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்றாக உடைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, திசைகாட்டிக்கான களம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கையின் அரசியலில் சிறிது மாற்றம் ஏற்பட பெருமளவில் வாய்ப்பிருக்கிறது. எனவே காத்திருப்போம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...