Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தமிழரசு மாநாட்டை தடுக்க சம்பந்தன் பெயரில் முயற்சி

T

The Leader Desk

டிசம்பர் 29, 2023 • 4:02 AM

தமிழரசு மாநாட்டை தடுக்க சம்பந்தன் பெயரில் முயற்சி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடத்தி கட்சியின் தேசிய மாநாட்டு சர்ச்சைக்குத் தீர்வு காண்பது எனத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது என்று சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இதன்போது, எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி கொழும்பிலுள்ள இரா.
  • யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
எழுத்து அளவு:

நடத்தி கட்சியின் தேசிய மாநாட்டு சர்ச்சைக்குத் தீர்வு காண்பது எனத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது என்று சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

 திருகோணமலை கிளைகளை மீளப் புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம் என்று இரா.சம்பந்தன் கட்சியின் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ஆராய நேற்று கட்சியின் சிலச்தலைவர்கள் யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதி அலுவலகத்தில் கூடி இந்த முடிவை எடுத்தனர் என்று கூறப்பட்டது.

 இதன்போது, எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் வீட்டில் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சிக்கல் தொடர்பில் ஆராய்வது என்றும், மாநாடு தொடர்பில் இறுதியான தீர்மானத்தை அங்கு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூடி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் என்றும், ஜனவரி 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடும் என்றும், 27 ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெறும் என்றும், தொடர்ந்து 28 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம்பெறும் என்றும் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை அலுவலகத்தில் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(காலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...