Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இந்திய மீனவர் அத்துமீறல் தொடர்பில் டக்ளஸ், வடக்கு எம்.பிக்கள் வாக்குவாதம்

T

The Leader Desk

டிசம்பர் 28, 2023 • 2:41 PM

இந்திய மீனவர் அத்துமீறல் தொடர்பில் டக்ளஸ், வடக்கு எம்.பிக்கள் வாக்குவாதம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
  • இதையடுத்து அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.
  • மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
எழுத்து அளவு:

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப் பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாகப் பேசப்பட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் திடீரெனக் கூட்டத்துக்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.

அமைச்சர் டக்ளஸ், கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். எனினும், அமைச்சர், மேற்படி நபர் பொது அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரிடம் அறவிடப்படும் தண்டப் பணத்தை, மீனவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்திய மீனவர் அத்துமீறல் தொடர்பில் டக்ளஸ், வடக்கு எம்.பிக்கள் வாக்குவாதம் | Tamil Leader | We Lead the Nation