Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்'

T

The Leader Desk

டிசம்பர் 27, 2023 • 4:58 AM

'ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.
  • யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • இவ்வாறான நிலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவில் சுமந்திரன் வந்தால் என்ன, சிறிதரன் வந்தால் என்ன என்பதில் பிரச்சினை இல்லை.
எழுத்து அளவு:

பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்வதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணலாம்” இவ்வாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதித் தேர்தலோ அல்லது வேறு எந்தத் தேர்தல் என்றாலும் நடைபெறுகின்றபோது சுயலாபம் இல்லாமல் மக்கள் நலன் சார்ந்து பேரம் பேசல்களின் அடிப்படையில்தான் எமது முடிவுகளும் எடுக்கப்படும். ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றபோது ஏனைய தமிழ்க் கட்சிகளும் பேரம் பேசல்களின் அடிப்படையில் தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவில் சுமந்திரன் வந்தால் என்ன, சிறிதரன் வந்தால் என்ன என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலின் அடிப்படையில் பேச்சு ஊடாகத்தான் எதையும் செய்ய முடியும்.

இன்றைய நிலைமையில் மீளவும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வர வேண்டும். ஏனெனில் நாடு பொருளாதாரப் பாதிப்பில் சிக்கியிருந்தபோது - பதவியை எடுக்கப் பலரும் மறுதலித்தபோது துணிச்சலாக வந்து பதவியை எடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.

நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்வதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணலாம்." - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்' | Tamil Leader | We Lead the Nation