Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தமிழ்க் கட்சியினருக்கு டக்ளஸ் சவால்

T

The Leader Desk

டிசம்பர் 27, 2023 • 4:54 AM

தமிழ்க் கட்சியினருக்கு டக்ளஸ் சவால்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
  • யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • குறிப்பாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் தும்புத்தடியாலும் தொட மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் எனப் பேச்சு நடத்துகின்றனர்.
  • “குறிப்பாக 13 ஐ ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது.
எழுத்து அளவு:

மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் சொல்லி வருகின்ற எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது வந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் தும்புத்தடியாலும் தொட மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் எனப் பேச்சு நடத்துகின்றனர்.

“இதனூடாக அன்று முதல் இன்று வரை உண்மையையும் சாத்தியமானதையுமே நாம் கூறி வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது அன்று நாம் சொன்னதை நிராகரித்தவர்கள் இன்று அதுவே சரியானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனையே வழங்கக் கோருகின்றமை காலம் கடந்த ஞானம்.

“எமது மக்களின் பிரச்சினைகளை மேதாவித்தனத்தோடு அணுக முற்பட்டால் இழப்புத்தான் ஏற்படும். ஆகையால் அதிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான வழியில் எடுதுரைத்தால் வெற்றி பெறலாம் என்பது எனது அனுபவம்.

“குறிப்பாக 13 ஐ ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அப்படியான ஒரே கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லை.

“உண்மையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை விட அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்பாவி மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

“இங்குள்ள ஒரு எம்.பியுடன் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தபோது நான் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தேன். குறிப்பாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்கள் செய்த விடங்கள் குறித்தும் கூறியிருந்தேன்.

“அன்று அவ்வாறு எல்லாம் செயற்பட்டவர்கள்தான் இன்றைக்கு வீர வசனங்களைப் பேசி உசுப்பேத்தும் அரசியலைச் செய்கின்றனர். உண்மையாகவே இங்குள்ள தமிழ்க் கட்சிகள் பலவற்றுக்கும் பல தடவைகள் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவர்கள் விவாதத்துக்கு வருவதில்லை.

“நான் பொதுவாக அவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றேன். எமது கட்சிக்கு நீங்கள்  நீண்டகாலமாகச் சேறுபூசி எனது குணாதியங்களைஎச் சிதைக்கும் வகையில் செயற்பட்டு வந்தீர்கள். ஆனால், அதைக் குறுகிய காலத்தில் விளங்கப்படுத்த முடியாது என்பதால் உங்களைப் பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்து வந்தேன். ஆனால், நீங்கள் எவரும் விவாதத்துக்கு வருவதில்லை.

“ஏனெனில் பகிரங்கமாக விவாதத்துக்கு வந்தால் உங்களின் ஏமாற்று வித்தைகள் தெரியவந்துவிடும் என அஞ்சுகின்றீர்கள். அத்தோடு துரோகிப் பட்டமும் உங்களுக்குச் சூட்டப்பட்டுவிடும் எனவும் பயப்படுகின்றீர்கள். இன்றைய சூழ்நிலையில் என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...