Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘மொட்டின் ஆதரவின்றி ரணிலால் வெற்றிபெற முடியாது’

T

The Leader Desk

டிசம்பர் 26, 2023 • 1:45 PM

‘மொட்டின் ஆதரவின்றி ரணிலால் வெற்றிபெற முடியாது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
  • இன்று (26) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
  • இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.
  • “அப்படி நடந்தால்கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும்.
எழுத்து அளவு:

வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தற்போதைய சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது. முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய அதிபரை தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால் அதிபர் தேர்தல் தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.

“அப்படி நடந்தால்கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும். அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவரினால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும். அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபராக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது?

“ரணில் அதிபராக வரவேண்டுமாக இருந்தால் மொட்டு கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே அவரால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...