Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘சம்பந்தன் - சுமந்திரன் விரும்பும் தீர்வை வழங்கவே முடியாது’

T

The Leader Desk

டிசம்பர் 26, 2023 • 4:50 AM

‘சம்பந்தன் - சுமந்திரன் விரும்பும் தீர்வை வழங்கவே முடியாது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகியோர் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் இணங்கவே மாட்டாது” என்று, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி.
  • “இறுதியாக ஜனாதிபதியுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் நடத்திய பேச்சின்போது வெறும் 4 தமிழ் எம்.பிக்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.
  • அதில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
எழுத்து அளவு:

ஆகியோர் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் இணங்கவே மாட்டாது” என்று, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகள் நடத்தும் சந்திப்புக்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் எல்லை மீறிப் பேசுகின்றனர். அரசமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவர்கள் இருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

“இறுதியாக ஜனாதிபதியுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் நடத்திய பேச்சின்போது வெறும் 4 தமிழ் எம்.பிக்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர். அதில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

“இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையேல் தாம் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமாகும். சர்வதேசத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று சம்பந்தன், சுமந்திரனிடம் சொல்லி வைக்கின்றேன்” என்றார்.

(காலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...