Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயரிடத்தில்’

T

The Leader Desk

டிசம்பர் 26, 2023 • 4:28 AM

‘ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயரிடத்தில்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்டான - ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • அங்கு கார்டினல் மேலும் கூறியதாவது, “இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.
  • “இவற்றுக்கு மத்தியில் வரி சுமைய அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும்இந்த நாட்டில் உள்ளனர்.
எழுத்து அளவு:

கட்டான - ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு கார்டினல் மேலும் கூறியதாவது,

“இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது. அந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியிருக்கக் கூடும். எதிர்கால கனவுகள் அனைத்தும் சிதைந்து போன நிலையிலேயே நாட்டிலுள்ள பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

“இவற்றுக்கு மத்தியில் வரி சுமைய அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும்இந்த நாட்டில் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் உலகில் ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றமை உண்மையில் கவலைக்குரியதாகும்.

“ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளது. இவ்வாறானவர்களால் இம்முறை நத்தார் பண்டிகையில் வறுமையிலுள்ளவர்களுக்கு கை கொடுப்பதற்கானதாக அமைந்துள்ளதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

“எனவே இல்லாதோருக்கும் வறியவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சகல கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கமல்லாத மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...