Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இமயமலைப் பிரகடனம்: பதறுகிறார் விமல்

T

The Leader Desk

டிசம்பர் 21, 2023 • 1:21 PM

இமயமலைப் பிரகடனம்: பதறுகிறார் விமல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது.
  • பேராசிரியர்களால் 140 பக்கங்களில் அறிக்கையொன்று வழங்கப்பட்டது.
  • “இலங்கையில் பிக்கு சமூகத்தின் ஆதரவைத் திறட்ட தவறியமை இரண்டாவது காரணமாகும்.
  • ரணில் கூறும் 13 இற்கு அப்பால் என்ற யோசனையை விடவும் மிகவும் பயங்கரமான திட்டத்துடன் மீண்டும் வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது. இதனால் இலங்கையைப் பிரிக்க முடியாமல்போனது. ஆனால், சூடானைப் பிரித்தனர். இலங்கையைப் பிரித்திருந்தால், ஈழத்துக்கு அப்பாற்பட்ட பகுதியில்தான் தெற்காசியாவின் காசா பகுதி அமைந்திருக்கும். பாலஸ்தீன மக்களுக்கு இன்று நடப்பதுதான் சிங்கள மக்களுக்கு நடந்திருக்கும். இதுதான் உண்மைக் கதை.

“சமாதான முயற்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து நோர்வே ஆராய்ந்தது. பேராசிரியர்களால் 140 பக்கங்களில் அறிக்கையொன்று வழங்கப்பட்டது. தோல்விக்கான காரணங்கள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன. சமஷ்டி ஆதரவு போக்கில் இருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆதரவைப் பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அப்போதைய பிரதமர் (ரணில் விக்கிரமசிங்க) தவறியமை முதல் காரணம்.

“இலங்கையில் பிக்கு சமூகத்தின் ஆதரவைத் திறட்ட தவறியமை இரண்டாவது காரணமாகும். அதாவது பிக்குகளின் ஆதரவைத் திரட்ட உரிய வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை என முழுமையாகக் கூறவும் முடியாது. சில பிக்குகள் இருக்கவே செய்தனர்.

“தற்போதுகூட டயஸ்போராக்கள், சில பிக்குகளைப் பிடித்துக்கொண்டு இமயமலைப் பிரகடனம் எனும் திட்டமொன்றை முன்னெடுக்கின்றனர். ரணில் கூறும் 13 இற்கு அப்பால் என்ற யோசனையை விடவும் மிகவும் பயங்கரமான திட்டத்துடன் மீண்டும் வந்துள்ளனர்.

“ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் ஆதரவு இருக்கவில்லை எனவும் காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஜே.வி.பியிடம்  தேசியவாதம் இல்லை. ஊழல்  எதிர்ப்புப் பற்றி மாத்திரமே குரல் எழுப்புகின்றனர். சந்திரிகாவும், ரணிலும்கூட நட்புடன் செயற்பட்டு வருகின்றனர்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...