Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று சந்திப்பு: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விக்கி புறக்கணிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 21, 2023 • 3:40 AM

தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று சந்திப்பு: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விக்கி புறக்கணிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.
  • “13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
  • அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நான் 24.07.2023 மற்றும் 15.08.2023 ஆகிய திகதிகளில் ஜனாதிபதியை கலாநிதி கே.விக்னேஸ்வரனுடன் சந்தித்தேன்.
எழுத்து அளவு:

உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.  

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 “13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

“ஆகவே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை” என்று விக்னேஸ்வரன் எம்.பி. அறிவித்துள்ளார்.

 இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நான் 24.07.2023 மற்றும் 15.08.2023 ஆகிய திகதிகளில் ஜனாதிபதியை கலாநிதி கே.விக்னேஸ்வரனுடன் சந்தித்தேன்.

“ஜனாதிபதியுடனான இரண்டாவது சந்திப்பின் போது, கீழ்க்கண்டவாறு ஐந்து நிபுணர்களை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வுக்கான குழுவொன்றை நியமிப்பது பற்றி அவர் சாதகமாகப் பேசினார்.

“அரசமைப்பின் 154 டி பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதியால் குழுவை நியமிக்க முடியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். சட்டப்பிரிவு 154 எல் இன் கீழ் பிரகடனம், சட்டங்கள் ஒப்புதலுக்குத் தயாராக இருக்கும் போது மட்டுமே தேவைப்படும்.

“செப்டெம்பர் 1, 2023 இற்குள் குழு செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இது நடக்கவில்லை. இப்போது டிசம்பர் 2023. 13 ஆவது திருத்தம் முழுவதுமாக அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் இப்போதைக்கு ஏமாற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

“13ஆவது திருத்தத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 வரைவு சட்டங்களைத் தயாரிப்பதே குழுவின் ஆரம்பப் பணியாகும். இந்தப் பணி சுமார் 6 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 154 எல் பிரிவின் கீழ் ஒரு பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், நிச்சயமாக அந்த வரைவு சட்டங்களின் ஒப்புதல் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“மத்திய அரசால் தவறாகக் கையகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் விடயங்களை மீளப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய நிர்வாக நடைமுறைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கும் இக்குழு வழிவகைகளையும் வழிமுறைகளையும் வகுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

“மாவட்ட நிர்வாகங்களை மாகாணங்களுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் குழுவின் ஆலோசனை ஜனாதிபதிக்கு அவசியமானது. ஜனாதிபதி உறுதியளித்தபடி இவை எதுவும் நடைபெறவில்லை.

“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

“ஆகவே, 2023 டிசம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகின்றேன்” என்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...