Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘நிலையான அரசாங்கத்தை அமைப்பது மொட்டின் கடமையாகும்’

T

The Leader Desk

டிசம்பர் 20, 2023 • 1:43 PM

‘நிலையான அரசாங்கத்தை அமைப்பது மொட்டின் கடமையாகும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமையும் எனவும் வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  • இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்குமென மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
  • கடந்த 2006 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தமது அரசாங்கம் வரி கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அமையும் எனவும் வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வரி அதிகரிப்பை எதிர்த்து தற்போது பொது மக்களும் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ள பெறுமதி சேர் வரி தற்போது மக்களுக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தற்போது பலர் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் வரிகள் குறைக்கப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடென அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்குமென மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தமது அரசாங்கம் வரி கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ராஜபக்ஷர்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை அமைப்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் அந்தக் கட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...