Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி’

T

The Leader Desk

டிசம்பர் 20, 2023 • 4:20 AM

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆதிக்கங்கள் காணப்பட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
  • எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சதி இருப்பதாகத் தெரிந்ததும், தாம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கார்டினல் கூறியுள்ளார்.
  • மேலும் அலி சப்ரியை, நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் கேட்டுக்கொண்டதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஆதிக்கங்கள் காணப்பட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அலி சப்ரியை, நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் கேட்டுக்கொண்டதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சப்ரியை நீதி அமைச்சராக நியமித்த முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து பௌத்த பிக்கு ஒருவர் தம்மை எச்சரித்ததை அடுத்தே, தாம் குறித்த கோரிக்கையை கோட்டாபயவிடம் விடுத்ததாக கார்டினல் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சப்ரியிடம், செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மதக் குழுவால் நடத்தப்பட்டது என்று தாம் நினைத்ததால், அவரின் நியமனம் குறித்து ஆரம்பத்தில் தாம் அதிருப்தியடைந்ததாக கார்டினல் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சதி இருப்பதாகத் தெரிந்ததும், தாம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கார்டினல் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கான உபகுழுவை நியமித்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கை இழக்கப்பட்டது எனவும் கார்டினல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகவியலாளர்களிடம் கூறியது போல், அவரைச் சந்திக்க தேவாலயம் தயாராக இல்லை என்று கார்டினல் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு எதிர்கால விசாரணையும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் செய்யப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக கார்டினல் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி’ | Tamil Leader | We Lead the Nation