Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ரணில்

T

The Leader Desk

டிசம்பர் 20, 2023 • 4:02 AM

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ரணில்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
  • வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (19) யாழ்.
  • இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.
எழுத்து அளவு:

வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (19) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டடிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ரணில் | Tamil Leader | We Lead the Nation