Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வியாழக்கிழமையன்று தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு

T

The Leader Desk

டிசம்பர் 19, 2023 • 4:27 AM

வியாழக்கிழமையன்று தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
  • இதற்கான அழைப்பு கடிதம் இன்றைய தினம் தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அழைப்பு கடிதம் இன்றைய தினம் தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று மாலை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்பினர், இமாலய பிரகடனம் ஒன்றை தயாரித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தனர்.

குறித்த பிரகடனம் முன்வைக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வியாழக்கிழமையன்று தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு | Tamil Leader | We Lead the Nation