Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

திடீரென ஒத்திவைக்கப்பட்ட ஹரிஹரனின் யாழ். இசை நிகழ்ச்சி

T

The Leader Desk

டிசம்பர் 18, 2023 • 12:57 PM

 திடீரென ஒத்திவைக்கப்பட்ட ஹரிஹரனின் யாழ். இசை நிகழ்ச்சி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும்,எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நொர்தன் யுனி (NORTHERN UNI) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (Hariharan Live in concert) மற்றும் ஸ்டார் நைட்(Star Night) நிகழ்ச்சி பிற்போடப்படுகிறது என்பதனை மக்களாகிய உங்களுக்கு மனவருத்தத்துடன் அறிய தருகிறோம்.
எழுத்து அளவு:

ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொர்தன் யுனி (NORTHERN UNI) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த உங்களை மனவருத்தத்தில் ஆட்படுத்துவதை எண்ணி SLIIT நொர்தன் யுனி (NorthernUni) ஆகிய நாம் மிகவும் கவலை கொள்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் சீரற்ற காலநிலை காரணமாகவும், தமிழ்நாட்டில் நிலவும் பதற்றகரமான காலநிலை காரணமாகவும், புயல் எச்சரிக்கையால் விமானபயணங்கள் தடைப்பட்டு இருப்பதாலும் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கடும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு இருப்பதனாலும் அங்கிருந்து மக்கள் வரமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (Hariharan Live in concert) மற்றும் ஸ்டார் நைட்(Star Night) நிகழ்ச்சி பிற்போடப்படுகிறது என்பதனை மக்களாகிய உங்களுக்கு மனவருத்தத்துடன் அறிய தருகிறோம்.

எம் நிகழ்ச்சி வெறுமனே இசை நிகழ்ச்சியாக மட்டுமே இருந்திருந்தால் இந் நிகழ்ச்சியை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் இது நட்சத்திர கொண்டாட்டமும் என்பதினால் எதிர்பார்த்தளவில் எதிர்பாத்த மாதிரி கண்ணுக்கு விருந்தளிக்க முடியாமல் போனதை இட்டு மனம் வருந்துகின்றோம்.

இயற்கையின் சீரற்ற தன்மையினால் இலவசமாக வழங்கும் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (Hariharan Live in concert) மற்றும் ஸ்டார் நைட் (Star Night) நிகழ்ச்சியானது எதிர்வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என்பதனை மகிழ்வுடன் அறிய தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

திடீரென ஒத்திவைக்கப்பட்ட ஹரிஹரனின் யாழ். இசை நிகழ்ச்சி | Tamil Leader | We Lead the Nation