Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வெங்காயம், முட்டை விலையைக் குறைக்க நடவடிக்கை

T

The Leader Desk

டிசம்பர் 18, 2023 • 12:49 PM

வெங்காயம், முட்டை விலையைக் குறைக்க நடவடிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
  • தற்போது சந்தையில் 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி இன்று (18) முதல் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் லங்கா சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட உள்ளது.
எழுத்து அளவு:

பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது சந்தையில் 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (18) முதல் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் லங்கா சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இன்றிலிருந்து மக்கள் சதொச ஊடாக மக்கள் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்ய முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 15 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அந்த கையிருப்புகளை விரைவில் தர பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பரிசோதனைகளின் பின்னர், சதொச கடைகளில் இருந்தும் சில தெரிவு செய்யப்பட்ட பல்பொருள் அங்காடிகளுக்கும் குறித்த முட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் முட்டை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால், நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், முட்டை இறக்குமதியை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 55 முதல் 65 ரூபா வரை அதிகரித்துள்ளதனாலேயே, மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் எதிர்காலத்தில் பல அதிகார வரம்புகளின் கீழ் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...