Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘பல இலட்சம் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார்’

T

The Leader Desk

டிசம்பர் 18, 2023 • 12:40 PM

‘பல இலட்சம் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
  • இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அரசியலமைப்பு, 116 தடவைகள் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.
  • “சிலர் 18 தடவைகள் மாற்றப்பட்டதே அதிகம் எனக்கூறுகிறார்கள்.
எழுத்து அளவு:

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை முன்னேற்ற வேண்டிய தெளிவான பார்வை அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சியும் தங்களுடையது என தெரிவித்த வஜிர அபேவர்தன, இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியாவின் அரசியலமைப்பு, 116 தடவைகள் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. உலகுக்கு ஏற்ற வகையில் நாமும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.

“சிலர் 18 தடவைகள் மாற்றப்பட்டதே அதிகம் எனக்கூறுகிறார்கள். ஆனால், இது போதாது. கொரோனா காலத்திற்குப் பின்னர், உலகமே மாற்றமடைந்துவிட்டது.

“ஐரோப்பிய நாடுகளில் புதிய சட்டங்கள் வந்துள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த சட்டக்கட்டமைப்பையே மாற்றியுள்ளன.

“இலங்கையும் உலகத்துடன் போட்டிப் போட வேண்டுமெனில், நாமும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...