Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மொட்டின் நிர்வாகச் செயலாளரான மில்கோ தலைவர் இராஜினாமா

T

The Leader Desk

டிசம்பர் 18, 2023 • 12:17 PM

மொட்டின் நிர்வாகச் செயலாளரான மில்கோ தலைவர் இராஜினாமா   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா, கடந்த வருடம் ஜனவரி மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரேணுக பெரேரா கூறியதாவது, “நான் நிறுவனத்திலிருந்து பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு, கடந்த 9ஆம் மாதம், 16ஆம் திகதியன்றே தெரிவித்துவிட்டேன்.
  • எனினும், அப்போது காணப்பட்ட அரசியல் நிலைமையால், சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
எழுத்து அளவு:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா, கடந்த வருடம் ஜனவரி மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஊழியர்கள் நலன் தொடர்பான பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி கடந்த ஒக்டோபர் மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த ரேணுக பெரேரா அதன் ஊழியர்களால், அலுவலக வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரேணுக பெரேரா கூறியதாவது,

“நான் நிறுவனத்திலிருந்து பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு, கடந்த 9ஆம் மாதம், 16ஆம் திகதியன்றே தெரிவித்துவிட்டேன். எனினும், அப்போது காணப்பட்ட அரசியல் நிலைமையால், சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

“ஒரு சில குழுக்களுக்கு, தங்களுக்குத் தேவையான ஒருவரை இதன் தலைவராக நியமிக்க வேண்டிய தேவையும் காணப்பட்டது. இதனால், சிலர் அரசியல் ரீதியாகவும் செயற்பட்டார்கள். அரசாங்கம் இது தொடர்பாக கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்து செயற்பட்டு வருகிறார்கள்.

“இனியும் இங்கே எனது காலத்தை செலவழிப்பது தேவையில்லாத ஒன்றாகும் என்பதே எனது நிலைப்பாடு”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...