Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கு முழு ஆதரவளிக்குமாறு கோரிக்கை

T

The Leader Desk

டிசம்பர் 15, 2023 • 2:41 PM

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கு முழு ஆதரவளிக்குமாறு கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு போன்றவற்றுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சஞ்ஜீவ விமலகுணரத்ன கோரியுள்ளார்.
  • முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களிலும் யாழ்ப்பாணம் கச்சேரியிலும் நடைபெற்ற மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அரச சார்பற்ற நிறுவனங்கள் வழமையை விட அதிக ஆர்வத்துடன் அந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளன, ஒரு சில அமைப்புகளைத் தவிர, அனைத்து அமைப்புகளும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று இதுவரையிலான நிகழ்ச்சிகளின் முன்னேற்றத்தை முன்வைத்தன.
எழுத்து அளவு:

நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு போன்றவற்றுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சஞ்ஜீவ விமலகுணரத்ன கோரியுள்ளார்.

முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நல்லிணக்கப் பொறிமுறைகளுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் மீண்டும் அவ்வாறானதொரு யுத்தம் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகள் குறித்து அந்தப் பொறிமுறைகளுக்குத் தெரியப்படுத்தி, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களிலும் யாழ்ப்பாணம் கச்சேரியிலும் நடைபெற்ற மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் வழமையை விட அதிக ஆர்வத்துடன் அந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளன, ஒரு சில அமைப்புகளைத் தவிர, அனைத்து அமைப்புகளும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று இதுவரையிலான நிகழ்ச்சிகளின் முன்னேற்றத்தை முன்வைத்தன.

அங்கு, திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களை எவ்வாறு சீரமைப்பது, அவற்றைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க வழிமுறைகளுடன் இணைந்து பணியாற்றுவது, அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பைப் பேணுவது மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டம் நடத்தப்பட்ட விதம், பங்கேற்பாளர்களின் பங்கேற்பு மற்றும் கூட்டங்களின் நிர்வாகத்திறனானது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தியமை ஆகியன அங்கிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...