Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இம்யூனோகுளோபுலின் ஊசி பற்றி மற்றொரு சர்ச்சை

T

The Leader Desk

டிசம்பர் 15, 2023 • 4:03 AM

இம்யூனோகுளோபுலின் ஊசி பற்றி மற்றொரு சர்ச்சை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்திரகுப்தவின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்குரியது என மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
  • இந்தநிலையில் தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்குரியது என மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
  • அத்துடன், குறித்த விநியோகஸ்தர் மூலம் மருத்துவ விநியோக திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மேலும் 04 வகை மருந்துகளையும் அப்புறப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மேலும் சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சந்திரகுப்தவின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்குரியது என மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு, குறித்த மருந்தை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளரும், மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளருமான டொக்டர் கபில விக்கிரமநாயக்க மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் நான்கு அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, கேள்விக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் ஊசியின் தரம் தொடர்பான தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்குரியது என மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்களுக்கு தரம் குறைந்த மருந்துகளை பெற்றுக்கொடுத்தமைக்கு மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக இதற்கு காரணமான சகல தரப்பினரையும் பாகுபாடு இன்றி கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த விநியோகஸ்தர் மூலம் மருத்துவ விநியோக திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மேலும் 04 வகை மருந்துகளையும் அப்புறப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...