Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழில் மீனவர்கள் கையெழுத்துப் போராட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 14, 2023 • 4:27 PM

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழில் மீனவர்கள் கையெழுத்துப் போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
  • “கடந்த பல வருடங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா நெருக்கடியால் கடற்றொழில் சமூகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
  • இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்துக்கு விடிவு வழங்குமாறு கேட்டு இந்த மகஜரைக் கையளிக்கின்றோம்” என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம், கடற்றொழில் சமூகத்திற்கு 2024இற்கான வரவு -செலவுத் திட்டத்தில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரசகொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகின்றோம், கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடிப் படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம் என்பதே ஐந்து அம்சக் கோரிக்கையாகும்.

“கடந்த பல வருடங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா நெருக்கடியால் கடற்றொழில் சமூகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்துக்கு விடிவு வழங்குமாறு கேட்டு இந்த மகஜரைக் கையளிக்கின்றோம்” என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...