Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலைகளுக்கு விசேட விசாரணைக் குழு வேண்டும்’

T

The Leader Desk

டிசம்பர் 14, 2023 • 3:14 AM

‘ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலைகளுக்கு விசேட விசாரணைக் குழு வேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
  • நேற்றைய தினம் (13) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை அவர் குறிப்பிட்டார்.
  • இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டு மார்ச் 21, செப்டெம்பர் 09, ஒக்டோபர் 04, ஒக்டோபர் 18, நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இருபத்தேழு இரண்டின் கீழ் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன்.
  • அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
எழுத்து அளவு:

வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (13) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டு மார்ச் 21, செப்டெம்பர் 09, ஒக்டோபர் 04, ஒக்டோபர் 18, நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இருபத்தேழு இரண்டின் கீழ் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன்.

“ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

“காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஹென்ரி பேதிரிஸ் படுகொலை மிலேட்சத்தனமானது.

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ரிச்சட் சொய்சா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ், பிரேமகீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் செலுத்த வேண்டும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...