Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் விடுதலை

T

The Leader Desk

டிசம்பர் 12, 2023 • 1:34 PM

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் விடுதலை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • அஹ்னாப் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக நிரூபிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்லது அரச தரப்பு நீதிமன்றம் முன்னிலையில் கொண்டு வந்த சாட்சியாளர்கள் புத்தளம் மேல் நீதிமன்றின் தீர்ப்பின் ஊடாக அடிப்படையற்றதென தெரியவந்துள்ளது.
  • கடந்த 2020 மே 16ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்ட மா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்தக குற்றம் சுமத்தப்பட்டு அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் கைது செய்யப்பட்டார்.

அஹ்னாப் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக நிரூபிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்லது அரச தரப்பு நீதிமன்றம் முன்னிலையில் கொண்டு வந்த சாட்சியாளர்கள் புத்தளம் மேல் நீதிமன்றின் தீர்ப்பின் ஊடாக அடிப்படையற்றதென தெரியவந்துள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழங்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே 16ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...