Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் மாபெரும் வெற்றி'

T

The Leader Desk

டிசம்பர் 12, 2023 • 3:54 AM

'மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் மாபெரும் வெற்றி'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.
  • இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பியிடம் உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் இணைந்து சமர்ப்பித்தனர்.
  • அதிகாரப் பகிர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
எழுத்து அளவு:

என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

அதிகாரப் பகிர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பியிடம் உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் இணைந்து சமர்ப்பித்தனர்.

சந்திப்பின் நிறைவில் சம்பந்தனுடனான பேச்சு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னரே செய்திருக்க வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும், நாங்கள் பல வருடங்கள் பின்தங்கியிருக்கின்றோம், இதை இப்போதாவது நீங்கள் செய்திருக்க முன்வந்திருப்பது மிகவும் முக்கிய விடயம், இதனை நாம் வரவேற்கின்றோம் என்றும் சம்பந்தன் கூறினார்.

“மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கொண்டு வருவது மிகவும் நல்ல விடயம், இதன் மூலமாக அரசமைப்பு மாற்றத்தை உருவாக்க முடியுமென்றால் அதுவொரு பெரிய வெற்றி என்றும் சம்பந்தன் தெரிவித்தார்” என்றார்.

“எமது முயற்சியை எதிர்ப்பவர்கள் எம்மைச் சந்தித்த பின் தெளிவு கிடைக்காவிட்டால் விமர்சிக்கலாம்” என்றும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் மாபெரும் வெற்றி' | Tamil Leader | We Lead the Nation