Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பாதீட்டுக்குப் பின் விளையாட்டு, நீர்ப்பாசன அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள்

T

The Leader Desk

டிசம்பர் 10, 2023 • 5:26 PM

பாதீட்டுக்குப் பின் விளையாட்டு, நீர்ப்பாசன அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலரும் காத்துக்கொண்டிருந்தமை இரகசியமல்ல.
  • மேல் நாட்டில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியும் மாவட்டத் தலைவர் ஒருவரும் அந்த இரண்டு பட்டங்களையும் பிடிக்கத் திட்டம் வைத்திருப்பதாகவும் கேள்வி.
  • உரிமையாளர்கள், வாரிசுகள், கோல்மூட்டிகள் எனப் பலரும் இதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோதும், இறுதியில் வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர்தான் இறுதி முடிவு எட்டப்படுமென்று நாட்டின் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பலரும் காத்துக்கொண்டிருந்தமை இரகசியமல்ல.

உரிமையாளர்கள், வாரிசுகள், கோல்மூட்டிகள் எனப் பலரும் இதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோதும், இறுதியில் வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர்தான் இறுதி முடிவு எட்டப்படுமென்று நாட்டின் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அதற்கு முன்னர் இவ்விரு அமைச்சுக்களையும் நடத்த வேண்டும் என்பதோடு, பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற காரணத்தால்தான், ஹரின் மற்றும் பவித்ராவுக்கு இவ்விரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர் இவ்விரு பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

மேல் நாட்டில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியும் மாவட்டத் தலைவர் ஒருவரும் அந்த இரண்டு பட்டங்களையும் பிடிக்கத் திட்டம் வைத்திருப்பதாகவும் கேள்வி.

அதைத்தான் நாங்கள் சொல்கிறோம், அரசியல்வாதிகள் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும்வரை மாத்திரம்தான் உணர்ச்சிமிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அப்படிச் செய்வோம், இப்படிச் செய்வோம் என்று சொல்பவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின்னர் வேறு கதைகளைச் சொல்வார்கள்.

இது, தமிழ்த் திரைப்படமொன்றில் காணப்பட்ட கிராமத்துக் காட்சியில், பாரிய மலையொன்றை அகற்றித் தருகிறேன் என்று சொல்லும் காமெடி நடிகர் செந்தில், கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த மலையைத் தூக்கி தன் தோல்மேல் வைக்குமாறு கூறுவதைப்போல் அமைந்துள்ளது.

அதனால், எமது அரசியல்வாதிகளின் கதைகளில் சிக்கிக்கொண்டால், நிம்மதி இல்லை, ஏமாற்றமே மிஞ்சும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...