Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் சூத்திரதாரி

T

The Leader Desk

டிசம்பர் 10, 2023 • 5:14 PM

அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் சூத்திரதாரி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரென, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
  • இருப்பினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் செய்தியொன்றை எடுத்துக்கொண்டுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார்.
  • மத்திய கலாசார நிதியத்தின் பணம் தொடர்பான விவாதத்தில் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரென, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிதியத்தின் பணம் தொடர்பான விவாதத்தில் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தானந்தவுக்கு சவால் விடுத்து வெளியேறினார். இதன்போது, “ராஜினாமா கடிதத்தை தயார் செய்வதற்காகச் செல்கிறார்போல” என்று, மஹிந்தானந்த கிண்டலடித்தார்.

இதற்கு மத்தியில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அனைவரும் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் ஏன் அங்கே செல்கிறார்கள் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் செய்தியொன்றை எடுத்துக்கொண்டுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார்.

நடப்பவற்றைப் பார்க்கும்போது, அந்தக் கதைகள் உண்மையாகவும் இருக்கலாம். காரணம், ஐதேக, ஐமச ஆகிய இரண்டும் பிரிந்து தேர்தலில் நின்றால், இரு தரப்பும் அவ்வளவுதான் என்று, இரு கட்சிகளின் தலைவர்களும் பேசத் தொடங்கியுள்ளனர்.

இல்லாவிடின், திசைக்காட்டிக்கு அரச அதிகாரத்தை தாம்பளத்தட்டில் வைத்து கொடுப்பதைப் போலாகிவிடும் என்று அச்சப்படத் தொடங்கியுள்ளனர். இந்தக் கதையை இரண்டு பக்கங்களுக்கும் மலிக்தான் எடுத்துச் செல்கிறார்.

இவர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நண்பரும் சஜித்துக்கு நெருக்கமானவருமாவார். அப்படியென்றால் அடுத்த அரசாங்கத்தின் சூத்திரதாரியாக விளங்குபவர் மலிக்கா? அதைச் செல்ல இன்னும் காலநேரம் இருக்கிறதல்லவா?

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...