Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'நாடு முழுவதும் மின் தடை ஏன் ஏற்பட்டது?': உண்மையை அறிவிக்குமாறு சபையில் குழப்பம்

T

The Leader Desk

டிசம்பர் 10, 2023 • 2:26 PM

'நாடு முழுவதும் மின் தடை ஏன் ஏற்பட்டது?': உண்மையை அறிவிக்குமாறு சபையில் குழப்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்” என்று, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
  • “இந்த விடயம் குறித்து மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதற்காகஇந்த விடயத்தை நான் கூறவில்லை.
  • இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில், “நாடு முழுவதும் நேற்று மின் தடை ஏற்பட்டது.
எழுத்து அளவு:

எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்” என்று, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் நேற்று மின் தடை ஏற்பட்டது. இந்தச் செயற்பாடானது மிகவும் பாரதூரமான ஒன்று. இந்த மின் தடை காரணமாக நீர் விநியோகத் தடையும் ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பல சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன.

“இந்த விடயம் குறித்து மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதற்காகஇந்த விடயத்தை நான் கூறவில்லை. நேற்று இந்த மின் தடை ஏற்பட்டமைக்கான உண்மையான காரணத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துகொள்வதை விடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

“ஆகவே, இந்த மின் தடைக்கு என்ன காரணம்? ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை எமக்கு அறியத்தர வேண்டும்.

“அதன்படி நாட்டில் நேற்று நிகழ்ந்த மின் தடையால் ஏற்பட்ட செலவுகள், வைத்தியசாலைகளில் ஏற்பட்ட மின் தடையால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த முழு அறிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும். சபாநாயகரின் அனுமதியுடன் இந்தப் பிரேரனையை முன்வைக்கின்றேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...