Tamil Leader News
முக்கியம்
அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●
செய்திகள்

சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்

T

The Leader Desk

அக்டோபர் 16, 2023 • 8:45 AM

சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
  • எனனிடம் சொல்லப்பட்டதுஎன்னவெனில் அது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகவும் பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு தெரிந்த வரையில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் சென்றடையவில்லை என்று தகவல் கிடைத்தன.
எழுத்து அளவு:

கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு தெரிந்த வரையில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் சென்றடையவில்லை என்று தகவல் கிடைத்தன.

இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும்.

சுமந்திரன் சொல்வதுபோல் கடிதம் இந்திய பிரதமரிடம் சென்றடைந்திருந்தால் அதற்குரிய பதில் கடிதத்தினை இந்தியப் பிரதமர் அனுப்பாததற்கு ஏதேனும் காரணம் ஒன்று இருக்க வேண்டும்.

எனனிடம் சொல்லப்பட்டதுஎன்னவெனில் அது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகவும் பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்தியப் பிரதமருடைய காரியாலயத்திற்கு செல்லும் கடிதங்கள் யாவற்றிற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் எழுதப்படும் எனக் கூறப்பட்டது.

அவ்வாறான பதில் வராததை வைத்துதான் இந்தியப்பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் சொல்லவில்லை என சொல்ல வேண்டி ஏற்பட்டது

மேலும் சிகிச்சை சுமந்திரனுக்கும் தேவைப்படலாம் எனக்கும் தேவையாக இருக்கலாம். நாங்கள் எல்லோரும் மனதால்பிரச்சினை பட்டவர்கள் தானே, ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனைம் இணைந்து சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருக்கும் போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும் | Tamil Leader | We Lead the Nation