Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்

T

The Leader Desk

ஜூலை 23, 2023 • 4:13 AM

மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இதன்போது குறித்த 02 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், குறித்த மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் எஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க குறிப்பிடுகின்றார்.
எழுத்து அளவு:



தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் மாதிரிகள் சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது குறித்த 02 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து எஸ்பிரின் மருந்துகளையும் அகற்றுமாறு மருத்துவ வழங்கல் பிரிவு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் எஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஏவி ஃபிஸ்துலா எனப்படும் விசேட கெனுயூலர் வகையின் தரமற்ற பகுதியை அகற்றுவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கெனுயூலர் வகைகளில் பலவற்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மருத்துவ வழங்கல் பிரிவு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...