Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்!

T

The Leader Desk

ஜூலை 22, 2023 • 2:04 PM

தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18).
  • இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).
  • ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எழுத்து அளவு:

இந்தியாவில் பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).

இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர். ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கு அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.

பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த போலீசார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர். பின்னர், வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கை மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் அண்ணனே தங்கையின் தலையை வெட்டி எடுத்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்! | Tamil Leader | We Lead the Nation