Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

மேலும் ஒரு தாயும் குழந்தையும் மாயம்

T

The Leader Desk

ஜூலை 22, 2023 • 2:03 PM

மேலும் ஒரு தாயும் குழந்தையும் மாயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதாங்களுமான பெண் குழந்தையும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
  • குறித்த இருவரும் நேற்று முன்தினம் (20) முதல் காணாமல் போயுள்ளதாக அந்த பெண்ணின் தாயார் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹங்குரான்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதாங்களுமான பெண் குழந்தையும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று முன்தினம் (20) முதல் காணாமல் போயுள்ளதாக அந்த பெண்ணின் தாயார் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருவரும் காணாமல் போன தினத்தன்று  பேருந்து ஒன்றில் ஹங்குரான்கெத்த, ரிக்கிலகஸ்கட நகரிற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹங்குரான்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த பெண்ணும் அவரது மகளும் பேருந்தில் பயணித்ததாக அவர்கள்  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரான்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (21) காலை வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...