Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

நாட்டை உலுக்கிய படுகொலை! சந்தேகநபர் கைது!

T

The Leader Desk

ஜூலை 22, 2023 • 4:30 AM

நாட்டை உலுக்கிய படுகொலை! சந்தேகநபர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை கடந்த 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது கணவர் அங்குருவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • அவர்களின் சடலங்கள் ஏற்கனவே விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
  • இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று முன்தினம் (20) விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
எழுத்து அளவு:

காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேநபர் உயிரிழந்த வாசனா என்ற பெண்ணின் கணவரின்  உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை கடந்த 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது கணவர் அங்குருவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிசார், வீட்டின் குளிர்சாதன பெட்டி கதவு மற்றும் தரைப்பகுதிகளில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக வாசனாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் இராணுவ வீரரான அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயான 'புருனோ' சந்தேக நபரின் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்றமையால் பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

இதற்கிடையில், வாசனாவும் அவரது குழந்தையும் காணாமல் போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, வாசனாவின் வீட்டிலிருந்து சுமார் ஐநூறு மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்களது சடலங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டு பிடிக்கப்பட்டன.

அவர்களின் சடலங்கள் ஏற்கனவே விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது, உயிரிழந்த வாசனாவின் கணவர், பொலிசார் மீது குற்றஞ்சாட்டியதுடன், உரிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தால், தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்ததாக தெரிவித்தார்.

இதேவேளை, பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று பிற்பகல் சடலங்கள் இருந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று முன்தினம் (20) விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்  பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

சந்தேகநபர் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.

அதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.

வாசனா மற்றும் குழந்தை காணாமல் போன அன்று, அந்த நபர் தனது முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான ஒன்றை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி கெமரா புகைப்படமும் வௌியாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில்  வரகாகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகநபர் பதுக்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...