Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாதப் பட்டியலில்!

T

The Leader Desk

ஜூலை 21, 2023 • 3:15 PM

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாதப் பட்டியலில்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் மேலும் பட்டியலிட்டுள்ளது.
  • ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
  • ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு அதில் அஹ்னாப் ஜசீமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
எழுத்து அளவு:

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் மேலும் பட்டியலிட்டுள்ளது.

2023 ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

"அவ்வப்போது திருத்தப்பட்டு ஓகஸ்ட் 1, 2022 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2291/02இல் வெளியிடப்பட்ட, 21 மார்ச் 2014 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1854/41இல் வெளியிடப்பட்ட நபர்கள் பட்டியலில் இறுதியாக திருத்தங்கள் செய்யப்பட்ட,
குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலின் உப அட்டவணையை நீக்கி பின்வரும் அட்டவணைகளை மாற்றுவதன் மூலம் மேலும் திருத்தப்பட்டுள்ளது.” என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு அதில் அஹ்னாப் ஜசீமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கையின் அதிகார வர்க்கத்தினருக்கும் புன்னியம் கிடைக்கும் வகையில், அஹ்னாப் ஜசீம் தற்போது தொழிலின்றி விவசாயம் செய்து வருவதாக மன்னாரமுது அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய் வில்சன் குணசேகர ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"UNWGAD அவரது கைது மனித உரிமை மீறல் என அடையாளம் கண்டுள்ளது." என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

UNWGAD என்பது தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகளின் பணிக்குழு ஆகும்.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...