Tamil Leader News
முக்கியம்
எழுதப் படிக்கத் தெரியாத ஆபிரிக்கப் பாட்டிகள் சூரிய மின்சாரப் பொறியியலாளர்களாக மாறிய விந்தை!●ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நெருக்கடியில்: 3.7 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யப் பரிந்துரை!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் கடுமையான பரிசீலனைக்கு!●இந்திய சினிமாவையே தலைகீழாக மாற்றிய ‘ராமாயணம்’ உலகம் முழுவதும் திரைக்கு!●ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு: வித்தியாசம் ரூ. 25!●நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறும் அவலம்!●தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●
செய்திகள்

பெண்களுடன் நெருக்கம் - தலைமறைவான பாதிரியார் சிக்கினார்!

T

The Leader Desk

மார்ச் 20, 2023 • 5:37 AM

பெண்களுடன் நெருக்கம் - தலைமறைவான பாதிரியார் சிக்கினார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் க்ரைம் பொலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிராமக விசாரணை நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. இவர் குழித்துறை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்பேற்றார்.

இதனிடையே, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ மட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய பெனடிக்ட் ஆன்றோ மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் அவர் தலைமறைவானார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் க்ரைம் பொலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் கேரளா அல்லது பெங்களுரூவில் பதுங்கி இருக்கலாம் என கூறப்பட்டு வந்தநிலையில் தனிப்படையினர் அங்கு ரகசியமாக சென்று கண்காணித்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை பொலிஸார் தேடி வந்தனர்.

மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் க்ரைம் பொலிஸில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் உள்ள பால் பண்ணை பகுதியில் தனிப்படை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...