புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.
எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய (பண)மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்று பாக்சி கூறியுள்ளார்.
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா இன்னும் உள்ளது.
இந்தநிலையில் அங்குள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அல்லது அங்கு செல்ல நினைப்பவர்களுக்கும் பொதுவான வழிகாட்டுதலாகவே இந்த எச்சரிக்கை இருக்கும் என்று பாக்சி குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுப்பதே இந்தியாவின் முயற்சியாகும் என்றும் பாக்சி தெரிவித்தார்.
நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்பதற்கான தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
இந்தநிலையில் முடிந்த வரையில் இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து நிற்கும் என்று பாக்சி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை
T
The Leader Desk
ஆகஸ்ட் 26, 2022 • 4:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
- இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா இன்னும் உள்ளது.
- இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

