Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அரசியல் பரபரப்புக்கு ரணிலின் அதிரடி அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 12, 2022 • 1:03 PM

அரசியல் பரபரப்புக்கு ரணிலின் அதிரடி அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலையில் அரசாங்கம் தற்சமயத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
  • தேசிய அரசாங்கம் ஒன்றை தற்போது அமைக்க முடியாது.
  • கோவிட் தொற்று நோய் காலத்திலேயே தேசிய இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.அந்த நேரத்தில் சர்வக் கட்சி மாநாட்டை நடத்துமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.
எழுத்து அளவு:

இந்த நிலையில் அரசாங்கம் தற்சமயத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

கோவிட் தொற்று நோய் காலத்திலேயே தேசிய இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.அந்த நேரத்தில் சர்வக் கட்சி மாநாட்டை நடத்துமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை. அது நடந்து இருந்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அதனை பயன்படுத்தி இருக்கலாம்.

எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் நிலைமை தற்போது படு மோசமாக மாறியுள்ளது. இதனால், இப்படியான நேரத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது பெரும் மூடத்தனமான செயல்.

தேசிய அரசாங்கம் ஒன்றை தற்போது அமைக்க முடியாது. என நம்புகிறேன். நாட்டின் இன்றைய சூழ்நிலையில், தேசிய அரசாங்கத்தில் இணைய வரும் முட்டாள்கள் யார் என்பதை சிந்திக்கின்றேன். அப்படியான முட்டாள்கள் இருந்தால், தேசிய அரசாங்கம் அமையும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், 

நாட்டின் தற்போதைய  நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வீர்களா என நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

அரசாங்கம் கூட்டவுள்ள சர்வக் கட்சி மாநாட்டில் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை ஒன்றை நிறைவேற்றி, அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசியல் பரபரப்புக்கு ரணிலின் அதிரடி அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation