Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பேக்கரி உணவுகளின் விலை சடுதியாக உயர்வு

T

The Leader Desk

மார்ச் 11, 2022 • 9:37 AM

பேக்கரி உணவுகளின் விலை சடுதியாக உயர்வு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
  • கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இதை அடுத்து, பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.
  • மதிய உணவு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து,

பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.

மதிய உணவு பொதி ஒன்றின்  விலை 20 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கொத்து பார்சல் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.

சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.

மேலும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் கட்டணத்தை முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...