Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

“எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது” என்ற கூற்றுக்கு மாறாக நேற்றிரவு எரிபொருளின் விலை சடுதியாக உயர்வு

T

The Leader Desk

மார்ச் 11, 2022 • 6:53 AM

 “எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது” என்ற கூற்றுக்கு மாறாக நேற்றிரவு எரிபொருளின் விலை சடுதியாக உயர்வு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் அதற்கு மாறாக, லங்கா IOC நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.
  • இதன்படி, அனைத்து ரக ஒரு லீட்டர் டீசலுக்கான விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.
  • ஒரு லீட்டர் டீசலில் புதிய விலை 214 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 254 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நடத்திய “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஆனால் அதற்கு மாறாக,

லங்கா IOC நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, அனைத்து ரக ஒரு லீட்டர் டீசலுக்கான விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஒரு லீட்டர் டீசலில் புதிய விலை 214 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 254 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நடத்திய “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏற்கனவே டீசல் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், இந்த மாதம் நான்கு கப்பல்களில் இருந்து 172,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கும் எரிபொருள் விரைவாக விநியோகிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஒல்க தெரிவித்தார்.

மேலும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பல மசகு எண்ணெய்க் கப்பல்கள் (30,000 மெட்ரிக் தொன்) பெறப்பட்டுள்ளது அதன் மூலம் எரிபொருள் எண்ணெய் பயன்படுத்தும் வெஸ்ட் கோர்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்க முடியும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

“மார்ச் மாதம் 20ஆம் திகதியளவில் மேலும் சில மசகு எண்ணெய்க் கப்பல்கள் வரவுள்ளன. எரிபொருள் கையிருப்பு கிடைத்ததும், தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகள் மிக விரைவாக தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...