Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள் - கை கொடுக்குமா சட்டம்?

T

The Leader Desk

மார்ச் 10, 2022 • 6:11 PM

பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள் - கை கொடுக்குமா சட்டம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இலங்கையில் ஒவ்வொரு நாளும் 658 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது.
  • சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக, 10 முதல் 13 வீதமான தாய்மார்கள் உயிரிழப்பதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.
  • கடந்த ஆண்டு டிசம்பரில், குடும்ப உறுப்பினர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவாக உயிரிழந்தமை நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எழுத்து அளவு:

2016 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இலங்கையில் ஒவ்வொரு நாளும் 658 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது.


சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக, 10 முதல் 13 வீதமான தாய்மார்கள் உயிரிழப்பதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.


பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு எதிராக பெண்களின் சார்பாக சமூக நல அமைப்புகள் குரல் எழுப்பிய போதும் இது நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு சான்றாக தொர்ந்து வருகின்றது.


கடந்த ஆண்டு டிசம்பரில், குடும்ப உறுப்பினர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவாக உயிரிழந்தமை நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அது நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது மறைந்து போய்விட்டது.


பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்திற்குச் சமீபத்தில் அழைப்பு விடுத்ததையடுத்து இந்த விடயங்கள் மீண்டும் பேசும் பொருளாகியுள்ளன.


1883 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தைத் தவிர, வேண்டுமென்றே கருச்சிதைவை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


அத்தோடு அவ்வாறு கருக்கலைப்பு செய்யப்பட்டது ஒரு பெண் "குழந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தண்டனை ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கலாம்.


அதேபோல் கருக்கலைப்பு செய்பவருக்கும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணுக்கும் இதே தண்டனைகள் வழங்கப்படும் எனச் சட்டம் சொல்கின்றது.


பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்வதை சட்டப்பூர்வமாக்கும் யோசனை பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டன.


2013 இல் இலங்கையின் சட்ட ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் உட்பட சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசும் அதனை சட்டமாக்கவில்லை.


இந்த முன்மொழிவுகளுக்கு மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
எனினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான, கருக்கலைப்பை மறுப்பது, மனித உரிமைகளைப் பாதிப்பதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.


இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக பெண்களின் வாழ்வதற்கான உரிமைகள் பேணப்படுவதோடு, ஆரோக்கியம், மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.


அத்தோடு பெண்களுக்கு தமது குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளியைப் பேணவும் உடல் ஒருமைப்பாடு, பாகுபாடு காட்டாமை, தனியுரிமை மற்றும் சமத்துவம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் உரிமை உட்பட பல மனித உரிமைகளைப் பாதிப்பதாகவும் வலியுறுத்துகின்றது.


அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பதன் மூலம் பெண்களின் சம உரிமையை நிலைநிறுத்தவும், சட்டத்தைச் சீர்திருத்துவதற்கும் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள் - கை கொடுக்குமா சட்டம்? | Tamil Leader | We Lead the Nation