Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வடக்கு மீனவர்கள் பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையாள வேண்டும்

T

The Leader Desk

மார்ச் 10, 2022 • 4:50 AM

வடக்கு மீனவர்கள் பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையாள வேண்டும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும் தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் சில அணுகுமுறைகள் காரணமாக தமிழக-வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து செல்வதனால் இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.
  • நேற்று (9) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட மூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • பீரிஸ் கையாள வேண்டுமெனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.
எழுத்து அளவு:

மேலும் தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் சில அணுகுமுறைகள் காரணமாக தமிழக-வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து செல்வதனால் இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கையாள வேண்டுமெனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

நேற்று (9) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட மூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டு மக்கள் மிகப்பெரும் போராட்டமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் நின்றே அனைத்துப் பொருள்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்தத் தவறை சுட்டிக்காட்டும் அமைச்சர்களை பதவி நீக்கக்கூடிய அரசாங்கமாக இருக்கிறது இந்த அரசாங்கம்.

இது ஒரு புறமிருக்க, இந்திய இழுவை படகுகளால் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகிறார்கள்.

இந்தவிடயம் தொடர்பாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கதைத்த போது, தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இந்திய பிரதமருடன் நாங்கள் கதைக்கின்றோம், பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கின்றோம் என வாக்குறுதியளித்தார்.

பல தடைவைகள் கடற்தொழில் அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும் அதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக பல பிரச்சினைகள் அங்கு உருவாகின்றன. இவரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆகவே கிழக்கு மீனவர்களின் பிரச்சினையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு வழங்க வேண்டும்” எனவும், முன்பு கடற்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர இருந்தபோதும் இப்படியான பிரச்சினைகள் வந்தன.

எனினும் அவர் சரியான முறையில் கடற்படையுடன் அணுகி அந்தப்பிரச்சினைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருந்தார்.
மீனவர்கள் மீன்பிடிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சர் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய நிலைமையில் இல்லை. அந்த திறமையும் அவருக்கு இல்லை.

எனவே தான் இப்பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையள வேண்டுமென வலியுருத்துகிறேன்.

கடற்தொழில் அமைச்சரின் அணுகுமுறை காரணமாகத்தான் வடக்கு மீனவர்களின் பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்றது என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...