Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது - காமினி லொக்குகே

T

The Leader Desk

மார்ச் 10, 2022 • 2:55 AM

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது - காமினி லொக்குகே

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
  • நேற்று கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 32 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், சிங்கப்பூர் விலையுடன் இன்று ஒப்பிடுகையில் அது 52 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
  • இதன்படி, ஒரு லீற்றர் டீசல் 81 ரூபா நட்டத்திலேயே விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
  • எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நேற்று கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 32 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், சிங்கப்பூர் விலையுடன் இன்று ஒப்பிடுகையில் அது 52 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, ஒரு லீற்றர் டீசல் 81 ரூபா நட்டத்திலேயே விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போது எரிபொருள்,அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

எனவே இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவி கிடைத்தவுடன், எரிபொருளை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று (9) சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்றார்கள்.

மக்கள் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு மணிக்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள்.
சிலர் எரிவாயு இல்லாமல் வீடுகளுக்குத் திரும்பும் நிலையும் உள்ளது.

எரிவாயு வாங்க வரும் மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடக்கிறது.

பல பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னால், எரிவாயு இல்லை என்ற பலகைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...