Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

"புடினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" - ரஷ்யாவுக்கு தொடர்ந்து விழும் பலத்த அடி

T

The Leader Desk

மார்ச் 9, 2022 • 10:35 AM

"புடினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" - ரஷ்யாவுக்கு தொடர்ந்து விழும் பலத்த அடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
  • ரஷ்யாவில் உள்ள மைக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில், ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
  • எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
  • அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் அப்பிள், லிவிஸ்,நெட்பிலிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மைக்டொனால்ட் இணைந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள மைக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில்,

ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில்,"உக்ரைனில் நடந்துவரும் தேவையற்ற மனித துன்பங்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது" என்று மைக்டொனால்ட் தெரிவித்துள்ள நிலையில்,

ரஷ்யாவில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்ததாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புடின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என்று தெரிவித்துள்ளார் பைடன்.

"புடினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.

அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...