Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

”மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்” என்று வெளியான செய்தி பொய்யானது - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 9, 2022 • 6:00 AM

”மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்” என்று வெளியான செய்தி பொய்யானது - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக போதிய எத்தனோல் உற்பத்தி செய்யப்படாமை காரணமாக மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக போதிய எத்தனோல் உற்பத்தி செய்யப்படாமை காரணமாக மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.

எனினும் இவ்வாறான செய்தி பொய்யானது என்று அவர் வலியுறுத்தினார். 

குமாரசிங்க மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 23 கலால் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் அரக்கு உட்பட உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்வதாகவும்,

எத்தனோல் உட்பட தேவையான மூலப்பொருட்கள் உள்ளுர் சந்தையில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே ”மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக” வெளியான செய்திகளில் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனோல் கிடைப்பதில்லை என  மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும்,

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், 2020 ஜனவரி முதல் எத்தனோல் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும்,

நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர்  தெரிவித்ததாகவும்,

டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி, இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள் ஏற்படுவதால்,

திட்டமிட்டபடி எத்தனோல் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை, கலால் திணைக்களத்திற்கு அறிவித்திருந்ததாக ஏற்கெனவே வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...