Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

“யாரைக்கண்டும் பயப்படவில்லை” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிரட்டல்

T

The Leader Desk

மார்ச் 9, 2022 • 4:50 AM

“யாரைக்கண்டும் பயப்படவில்லை” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிரட்டல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய இராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.
  • இதேவேளை ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தலைநகர் கீவ் நகரில் தங்கி உள்ளார்.
  • இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் காணொலி ஆதாரங்களை அந்த நாட்டு இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய இராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் காணொலி ஆதாரங்களை அந்த நாட்டு இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதேப்போல, உக்ரைனின் மற்றொரு பகுதியில் நுழைந்த ரஷ்ய இராணுவ துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் இராணுவம் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது.

இதையடுத்து இதுகுறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது.

இந் நிலையில் பெரும்பாலான உலகமக்கள் உக்ரைனிக்கு ஆதரவான குரல்களையும், உக்ரைன் இராணுவத்தின் தடுப்பு தாக்குதல் வெற்றிகளை தங்களின் வெற்றியை போல் கொண்டாடியும் வருகின்றனர்.

அதேசமயம் ரஷ்யாவின் இந்த தாக்குதல் மனோபாவத்திற்கு உலகளவில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தலைநகர் கீவ் நகரில் தங்கி உள்ளார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மக்களிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவிக்கையில், நான் கீவ் நகரின் பன்கோவா தெருவில் தான் தங்கியுள்ளேன். மறைந்து வாழவில்லை. யாரை கண்டும் பயமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தேசப்பற்று மிக்க இந்த போரில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.

புடினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் கீவ் இல் தான் இருக்க போகிறேன் என அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...