Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு

T

The Leader Desk

மார்ச் 9, 2022 • 2:55 AM

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் நேற்று (08) அவர் இதனைக் கூறியுள்ளார்.
  • இதனால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது மலக்கழிவு துர்நாற்றம் வீசுகிறது” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கு முன்பாக, கடந்த 5 ஆம் திகதி இரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் நேற்று (08) அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஹிருணிகா இரும்பு பெண். அவர் குண்டர்களுக்கு அஞ்ச மாட்டார்.

அவர் மிக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரச தலைவர் இல்லத்திற்கு எதிரில் நடத்தினார்.

இதன் எதிரொலியாக ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக்கழிவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது மலக்கழிவு துர்நாற்றம் வீசுகிறது” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கு முன்பாக, கடந்த 5 ஆம் திகதி இரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்து அவரை கடுமையாக எச்சரித்ததாக ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் நிரூபா கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

மேலும் ஹிருணிகா பிமேரச்சந்திர தலைமையிலான ஐக்கிய மகளிர் சக்தியின் பெண்கள் குழு, கடந்த 5 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் சென்று ஒரு ஜனநாயக ரீதியான போராட்டம் மூலம் கடிதம் ஒன்றை கொடுத்தமைக்கு, வெறிப்பிடித்த வன்முறைக் குழுவின் மூலம் எமக்கு மேற்கொள்ளப்பட்ட பதிலாடியாகவே இதை நாங்கள் கருதுகின்றோம்.

என இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...