Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ரஷ்ய தளபதி விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டாரா? ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் காணொளி செய்தி

T

The Leader Desk

மார்ச் 8, 2022 • 4:52 AM

ரஷ்ய தளபதி விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டாரா? ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் காணொளி செய்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தநிலையில் தமது தாக்குதல்களின்போது ரஷ்யாவின் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று உக்ரைன் இராணுவம் கூறுகிறது.
  • அவர், ரஷ்யாவின் மத்திய 41 வது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதி ஆவார்.
  • இன்று (08) அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

 

இந்தநிலையில் தமது தாக்குதல்களின்போது ரஷ்யாவின் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று உக்ரைன் இராணுவம் கூறுகிறது.

மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்- விட்டலி ஜெராசிமோவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர், ரஷ்யாவின் மத்திய 41 வது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதி ஆவார்.

கொல்லப்பட்ட ஜெராசிமோவ் இரண்டாவது செச்சினிய போரிலும் சிரியாவில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றதாக உக்ரேனிய உளவுத்துறை கூறுகிறது.

விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்திருந்தாலும், ரஷ்ய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் கருத்து கூறவில்லை.

ஆனாலும் உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.

இன்று (08) அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொலியில், புடின் "எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்" என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார்.

“உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்தநிலையில் முழு நாடும் அவர்களுக்காக பெருமைப்பட்டு உணர்வது போல, நீங்கள் அவர்களைப் பற்றி பெருமைப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் போர் நடவடிக்கைகளில் ரஷ்ய படையினர் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஷ்ய படையினர் ரஷ்ய மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நம்பகத்தன்மையுடன் உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...