Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவு - மக்கள் கடும் எதிர்ப்பு

T

The Leader Desk

மார்ச் 7, 2022 • 3:11 PM

வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவு - மக்கள் கடும் எதிர்ப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார்.
  • இரவு வேளையில் வீதி விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் அதிகரிப்பதுடன், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் வழி வகுக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
  • நீண்டகாலத்தை கணக்கிட்டு எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்காததே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும், 5 ஆம் திகதியின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனக் கூறினர்.
  • விமல் வீரவங்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் இன்று (07) முன்னிலையான பிறகு, நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

 

ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டின் டொலர் கையிருப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது.

மேலும் போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதையடுத்து, அதனை ஈடு செய்ய எரிபொருளை பயன்படுத்துவதால் பாரிய செலவு ஏற்படுகிறது.

இவ்வாறான சவாலான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கான ஒரே வழி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதாகும்.

எனவே அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்த, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பசில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் அமைச்சர் பசிலின் இந்தக் கோரிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவொரு முட்டாள்தனமான செயற்பாடு என பொதுமக்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இரவு வேளையில் வீதி விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் அதிகரிப்பதுடன், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் வழி வகுக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் எரிவாயு பிரச்சினை மேலும் உக்கிரமடைந்து வருகிறது. நீண்டகாலத்தை கணக்கிட்டு எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்காததே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும்,

5 ஆம் திகதியின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனக் கூறினர். ஆனால் இன்றும் மின்சாரம் துண்டிப்பு தொடர்பான திட்டத்தை அறிவித்துள்ளனர் என விமல் வீரவங்ச கருத்து தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் இன்று (07) முன்னிலையான பிறகு, நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உச்சமடைய செய்து, நாடு பாரிய நெருக்கடிக்குள் விழுந்த பின்னர், மேற்குலக நாடுகளின் தந்திரத்திற்குள் நாட்டை சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே நிதியமைச்சரின் தேவையாக இருக்கின்றது.

நாட்டில் தற்போது அந்நிய செலாவணி பிரச்சினையே இருக்கின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை வெளியிட முடியாமல் இருக்கின்றது என  அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவு - மக்கள் கடும் எதிர்ப்பு | Tamil Leader | We Lead the Nation