Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

"விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” - முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது

T

The Leader Desk

மார்ச் 7, 2022 • 5:27 AM

"விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” - முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி கொண்டிருக்கிறது.
  • மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ள நிலையில். உக்ரைனிலுள்ள முக்கிய நகரமான கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் கைப்பற்றியிரந்தது.
  • இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

 

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,

உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி கொண்டிருக்கிறது.

உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ள நிலையில்.   

உக்ரைனிலுள்ள முக்கிய நகரமான கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் கைப்பற்றியிரந்தது. இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்களை விட ரஷ்ய வீரர்களே பல மடங்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் சந்தித்துள்ளனர்.

உக்ரைனின் ஆயுதப் படைகளின் இந்த தொடர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் சமாளிக்க முடியாமல் நகரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...