Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்கும் ரஷ்யாவின் புதிய சட்டம் சர்வாதிகாரத்தின் உச்சம்!

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 6:23 AM

 பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்கும் ரஷ்யாவின் புதிய சட்டம் சர்வாதிகாரத்தின் உச்சம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் விளைவாக பிபிசி, ப்ளூம்பெர்க் மற்றும் பிற வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டில் அறிக்கையிடலை நிறுத்தியுள்ளன.
  • ரஷ்யாவின் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை இராணுவத்தைப் பற்றிய "போலி" செய்திகளை வேண்டுமென்றே பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
  • இது ரஷ்யா விரும்புவது போன்று ஒரு தனி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை புடினின் சர்வாதிராகத்தின் உச்சக்கட்டத்தின் பிரதிபளிப்பாகும்.
  • இந்த போர் தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை உருவாக்கியுள்ளது, உக்ரைன் மீதான போரை எதிர்க்கும் சர்வதேச தடைகள் மாஸ்கோவை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்துகிறது.
எழுத்து அளவு:

இதன் விளைவாக பிபிசி, ப்ளூம்பெர்க் மற்றும் பிற வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டில் அறிக்கையிடலை நிறுத்தியுள்ளன. ரஷ்யாவின் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை இராணுவத்தைப் பற்றிய "போலி" செய்திகளை வேண்டுமென்றே பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

"இந்தச் சட்டம் எங்கள் ஆயுதப் படைகளை இழிவுபடுத்தும் வகையில் பொய் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டவர்களுக்கு தண்டனை மற்றும் மிகக் கடுமையான தண்டனையை கட்டாயப்படுத்தும்" என்று ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டுமாவின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின் கூறினார்.

அரசு ஆதரவு செய்தி சேவைகள் மற்றும் பிபிசி, டாய்ச் வெல்லே மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இணையதளங்களை கட்டுப்படுத்தியதற்காக ரஷ்யா பேஸ்புக்கைத் தடைசெய்துள்ளது. CNN மற்றும் CBS செய்திகள் ரஷ்யாவில் ஒளிபரப்பு செய்வதை நிறுத்துவதாக தெரிவித்தன, மேலும் பிற செய்தி சேவைகள் ரஷ்யாவை தளமாகக் கொண்ட பத்திரிக்கையாளர்களின் பெயர்களையும் அகற்றிவிட்டன.

பத்திரிகை சுகந்திரம் மீதான ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உண்மை நிலவரங்களைளும் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் வெளிகொண்டுவருவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். இது ரஷ்யா விரும்புவது போன்று ஒரு தனி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை புடினின் சர்வாதிராகத்தின் உச்சக்கட்டத்தின் பிரதிபளிப்பாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலாக ரஷ்யாவின் உக்ரையின் மீதான தாக்குதல் உள்ளது. 10வது நாளாக சனிக்கிழமை, உக்ரைனில் நகரங்களை முற்றுகையிட்டு ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதலை முன்னெடுத்துள்ளன.

இந்த போர் தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை உருவாக்கியுள்ளது, உக்ரைன் மீதான போரை எதிர்க்கும் சர்வதேச தடைகள் மாஸ்கோவை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்துகிறது.

இந்த நிலைமை பல தசாப்தங்களாக நினைத்துப் பார்க்காத ஒரு பரந்த உலகளாவிய மோதலுக்கு வழிவகுத்துள்ளமை மேற்குலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ தனது படையெடுப்பு ஆபத்தான தேசியவாதிகளாகக் கருதும் நபர்களைக் கைப்பற்றுவதற்கான ஒரு "சிறப்பு நடவடிக்கை" என்று கூறுகிறது, மேலும் பொதுமக்களை குறிவைப்பதை மறுத்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்கும் ரஷ்யாவின் புதிய சட்டம் சர்வாதிகாரத்தின் உச்சம்! | Tamil Leader | We Lead the Nation